ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை: நகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
திருத்தணி: திருத்தணி ஊராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்களுக்கு, நகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.
திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில், 300க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு ஆழ்துளை கிணறுகள் மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி, பின் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கோடை காலம் என்பதால், பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதாவது, மின்மோட்டார் பழுது, மின்சாரம் துண்டிப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருத்தணி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, ஒன்றியத்தில் பணியாற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பம்ப் ஆப்பரேட்டர் ஆகியோரிடம், ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கண்காணித்து, அதற்கான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்க வேண்டும்.
மின்மோட்டார் பழுது, குழாய்கள் சேதம் போன்றவற்றை போர்க்கால நடவடிக்கையில் சீரமைக்க வேண்டும் என, நகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.
மேலும்
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
-
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை
-
யார் உங்கள் வேட்பாளர்?
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா