அகத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

பொன்னேரி: பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

பொன்னேரி ஆரணி ஆற்றின் கரையோரத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடந்தாண்டு இக்கோவில் திருப்பணிகள் துவங்கப்பட்டது. கோவில் வெளி பிரகார சுற்றுச்சுவர் புதுப்பிப்பு, கோபுரங்கள், விநாயகர் சன்னிதி, நவக்கிரக சன்னிதி ஆகியவை புனரமைப்பு என, பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

இப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மாலை முதல் யாகசாலை பூஜை துவங்கியது. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் யாகசாலையும், மாலை 4:30 மணிக்கு மூன்றாம் யாகசாலை பூஜையும் நடைபெற உள்ளன.
காலை 8:15 மணிக்கு ஆனந்தவல்லி அம்பிகை, அகத்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊாற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

Advertisement