அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க., கவுன்சிலர்
தொண்டாமுத்தூர்:கோவை மாநகராட்சியில், 91வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.,வை சேர்ந்த ராஜேந்திரன் உள்ளார். இவர் தி.மு.க.,வில் இருந்து விலகி, சுகுணாபுரத்தில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
தொடர்ந்து அ.தி.மு.க., வேட்பாளர் வேலுமணியை ஆதரித்து, கோவைப்புதூர் பகுதியில் பிரசாரம் செய்தார். ஓட்டுப்பதிவுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.,வில் இருந்து, மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர், அ.தி.மு.க.,வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement