தெறிக்க விட்ட விசில் சத்தத்துடன் த.வெ.க.,வேட்பாளர் பிரசாரம் ஓவர்
கோவை: கோவை தெற்கு தொகுதி தமிழக வெற்றி கழக (த.வெ.க.,) வேட்பாளர் செந்தில்குமார், அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து, பிரசாரத்தை முடித்து கொண்டார்.
செந்தில்குமார் கூறுகையில், ''தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது குறித்து அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளோம். டவுன் ஹால் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல், தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன், என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement