திண்டுக்கல்லில் பட்டுவாடா; ரூ.6.34 லட்சம், பரிசுக்கூப்பன், டோக்கன்கள் பறிமுதல்
திண்டுக்கல்:திண்டுக்கல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.6.34 லட்சம், பரிசுக்கூப்பன், டோக்கன்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டசபை தேர்தல் நாளை (ஏப்.23) நடக்கும் நிலையில் திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. இடையே கடும் போட்டி உள்ளது. 2 கட்சிகளின் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதை தடுக்க பறக்கும்படையினருக்கு கலேக்டர் சரவணன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தெரு, தெருவாக தேர்தல் பறக்கும்படையினர் ரோந்து சென்றனர். அதிகாரி மருதமுத்து தலைமையிலான குழுவினர் பிள்ளையார் பாளையம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது தி.மு.க., பிரமுகர் விஸ்வநாதன் மகன் தினேஷ்பிரபு 36, ஓட்டிவந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.2.50 லட்சம் , வாக்காளர் பட்டியல், பரிசு கூப்பன், டோக்கன்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் நகர் அங்குவிலாஸ் இறக்கம் அருகே மணிகண்டன் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ரோந்து சென்றபோது பணம் விநியோகம் செய்த திண்டுக்கல் நரிப்பாறையை சேர்ந்த தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் முத்துமாமுண்டி 51, தப்பியோடினார். அவரின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.1.34 லட்சம், வாக்காளர் பட்டியல், ரூ.8 ஆயிரத்துக்கான பரிசு கூப்பன், டோக்கன்கள் கைப்பற்றப்பட்டன. 100 வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் பெற வீட்டில் காத்திருந்ததும் தெரியவந்தது. பாலகிருஷ்ணாபுரத்தில் நடந்த சோதனையில் ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பட்டுவாடா செய்த அரசியல் கட்சியினர் தப்பிஓடினர். பறக்கும்படையினரால் கைப்பற்றப்பட்ட பணம், பரிசு கூப்பன், டோக்கன் உள்ளிட்ட ஆவணங்கள் உதவி தேர்தல் அலுவலர் சுல்தான் சிக்கந்தர், பிரேம்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி , தெற்கு, மேற்கு, தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்