எம்.சி.டி., மேயர் தேர்தலுக்கான வேட்பாளர் பா.ஜ., அறிவிப்பு
புதுடில்லி:டில்லி மாநகராட்சியின் மேயர் பதவிக்கு, ரோஹினி பகுதியில் கவுன்சிலர் பர்வேஸ் வாஹியை, பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது. அதுபோல, துணை மேயர் பதவிக்கு மோனிகா பந்த், நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு ஜெய்பகவான் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ., வேட்பாளர்களுக்கு எதிராக போட்டிகள் எதுவும் இருக்காது என்பதால், வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக கூறப்படுவதால், ரோஹினி பகுதியின் கவுன்சிலர் பர்வேஸ் வாஹி வெற்றி உறுதி என நம்பப்படுகிறது.
டில்லி மாநகராட்சியின் மேயர் பதவிக்கு, வார்டு எண், 53 இ யில் உள்ள, ரோஹினி என்ற பகுதியின் கவுன்சிலர் பர்வேஸ் வாஹியின் பெயரை, பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது.
மோனிகா பந்த் பெயரை, துணை மேயர் பதவிக்கான வேட்பாளராக பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது.
அதுபோல, நிலைக்குழு உறுப்பினர் பதவி மற்றும் சபை தலைவர் பதவிக்கு, பகவான் யாதவ் பெயரை பா.ஜ., மேலிடம் நேற்று அறிவித்துள்ளது. மேலும், நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக மணிஷ் சாத்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை, 5:00 மணியுடன் முடிவடைந்தது. இவர்களின் வெற்றி வாய்ப்பு எப்படி என்பது, வரும், 29ம் தேதி தெரிய வரும்.