மாதிரி ஓட்டுச்சாவடியில் சிவப்பு கம்பள வரவேற்பு
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களை வரவேற்கும் விதமாக சிவப்பு கம்பளம் விரித்து வாழை மர தோரணம் அமைத்திருந்தனர்.
தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 135வது பூத் மாதிரி ஓட்டுச்சாவடியாக அமைக்கப்பட்டது. வாசலில் வாழை மரம் தோரணம், கலர் பலுான்கள் வளைவு அமைத்து, படிகளில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
ஓட்டுப்போட வந்த வாக்காளர்களை அதிகாரிகள் வரவேற்றனர். இதனை பார்த்த வாக்காளர்கள் உற்சாகமடைந்து முக மலர்ச்சியோடு ஓட்டுப்போட்டு சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement