சில்மிஷ ஆசிரியருக்கு 'போக்சோ'
திருச்செங்கோடு: மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை, போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடுவை சேர்ந்தவர் 10 வயது மாணவி. இவர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஏப்., 17ல், தலைமை ஆசிரியை விடைத்தாள் திருத்துவதற்கு உதவியாக மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். மாணவி, மாலை வீடு திரும்பியபோது சோகமாக இருந்துள்ளார்.
அவரது தாய் விசாரித்தபோது, பள்ளியில் வையப்பமலையை சேர்ந்த ஆசிரியர் நடராஜன், 57, தகாத முறையில் நடந்ததாக தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், 'சைல்டு' லைனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்களின் புகாரின்படி, திருச்செங்கோடு மகளிர் போலீசார், போக்சோவில், ஆசிரியர் நடராஜனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
-
சாலை விபத்தில் இரு வாலிபர் பலி
-
சிதம்பரம் அருகே உள்வாங்கிய நெடுஞ்சாலையில் ஒரு பக்க சாலையில் போக்குவரத்து துவக்கம்
-
சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கி விடுவோம்
Advertisement
Advertisement