சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கி விடுவோம்

@quote@ தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் முதல், வீட்டில் தனியே உள்ள முதியோர் வரை, அனைத்து தரப்பினருமே அச்சத்துடனேயே வாழும் நிலைதான் உள்ளது. மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்குமான பாதுகாப்பு, கேள்விக் குறியாகி உள்ளது.
மகளிர் மசோதாவை எதிர்த்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் வரலாற்று பிழை செய்து விட்டன. கெடுமதி கொண்ட அரசியல் எதிரிகள், எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் உறுதி ஏற்போம்.

- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,quote

Advertisement