நெல் கொள்முதலுக்கு அலைக்கழிப்பு
மதுரை: ''நெல் கொள்முதலில் அரசின் பின்னடைவால், அனைத்து சீசன்களிலும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்,'' என, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு குழ் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வருத்தம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் ரபி, காரீப், குறுவை சாகுபடி மூலம் பெரும்பாலான மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மோட்டா ரக அரிசிக்கு, வியாபாரிகளிடம் உரிய விலை கிடைக்காது; அதேநேரத்தில் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
எனவே, விவசாயிகள், மோட்டா ரகத்தை பயிரிட்டு, அறுவடைக்கு பின், மாநில அரசின் நெல் கொள்முதல் மையத்தில் விற்பனை செய்கின்றனர்.
தற்போது, 1 கிலோ நெல்லுக்கு மத்திய, மாநில அரசுகளின் ஊக்கத்தொகையுடன், 25.10 ரூபாய் கிடைக்கிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகமான டி.என்.சி.எஸ்.சி.,யின் கீழ் செயல்படும் நெல் கொள்முதல் மையங்களில் எந்த கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவில்லை.
ஆட்கள் பற்றாக்குறை சீசன்தோறும் உள்ள முக்கிய பிரச்னை. ஒவ்வொரு சீசனிலும் விளையும் நெல்லுக்கு ஏற்ப எத்தனை மையங்கள் திறக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டாலும், மையங்கள் திறப்பது டி.என்.சி.எஸ்.சி., அதிகாரிகளின் கையில் தான் உள்ளது. கடந்தாண்டு, குறுவையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், ஆலைகளுக்கு அனுப்பப்படவில்லை.
வெளிமாநிலங்களில் இருந்து மத்திய தொகுப்பின் மூலம் கிலோ, 20 ரூபாய்க்கு வாங்கப்படும், பொது வினியோக திட்டத்திற்கான அரிசியை கிலோ, 42 ரூபாய்க்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை தனியாருக்கு தாரை வார்த்து உள்ளது தமிழக அரசு.
கமிஷனுக்காக இடைத்தரகர் மூலம் அரிசியை பெற்று, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை வீணடிக்கின்றனர். ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக, சம்பா பருவத்தில் கொள்முதல் செய்த நெல், ஆலைகளுக்கு அனுப்பப்படாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இச்செயலால், மீண்டும் தனியாருக்கு கொள்முதலை தாரைவார்க்கும் நடவடிக்கையில் அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
-
சாலை விபத்தில் இரு வாலிபர் பலி
-
சிதம்பரம் அருகே உள்வாங்கிய நெடுஞ்சாலையில் ஒரு பக்க சாலையில் போக்குவரத்து துவக்கம்
-
சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கி விடுவோம்