சப்னா புக் ஹவுஸ் சார்பில் ஏப்., 25ல் ஓவிய போட்டி

கோரமங்களா: உலக குழந்தைகள் ஓவிய தினத்தை ஒட்டி, பெங்களூரு கோரமங்களாவில் உள்ள சப்னா புக் ஹவுஸ் மற்றும் ஸ்டேட்லர் இணைந்து, வரும் 25ம் தேதி காலை 11:00 மணிக்கு ஓவிய போட்டி நடத்துகிறது. இதில், 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்.

இப்போட்டி யில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு இலவசமாக ஓவிய பொருட்கள் அடங்கிய கிட்கள், போட்டியில் பங்கேற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதில் பங்கேற்க விரும்புவோர், https://forms.gle/ZiqCABMAsUhN3hzA8 என்ற இணைய முவகரில், 199 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement