நான்கு சட்டசபை தொகுதிகளில் 1514 ஓட்டுச்சாவடிகளில்  நாளை ஓட்டுப்பதிவு*   145 பதட்டமானவை:  பாதுகாப்பு பணியில்  2000 போலீசார்

ராமநாதபுரம்: தமிழகத்தில் நாளை (ஏப்.,23) சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 1514 ஓட்டுச்சாவடிகளில் 145 பதட்டமானவை. இவ்விடங்களில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. **** துணை ராணுவத்தினருடன் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் 13 பேர், பரமக்குடியில் 12 பேர், திருவாடானையில் 21, முதுகுளத்துாரில் 20 என 66 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நேற்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது. சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 3 குழு வீதம் 24 மணி நேரம் இயங்கக் கூடிய 36 பறக்கும் படை மற்றும் 36 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1514 ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், வாக்காளர்கள் அலைபேசிகள் வைப்பறையும், வெப் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. ஒவ்வொரு பூத்திற்கும் தலைமை அலுவலர், நிலை 1 முதல் 3 என பி.எல்.ஓ., வீதம் பணிபுரிகின்றனர். இதற்காக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 10,200 ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என 13 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வையில் ஓட்டுச்சாவடிகளுக்கு மை, பேனா. பேப்பர், இங்க் பேடு மற்றும் வீல்சேர் உள்ளிட்ட தளவாடப்பொருட்கள் அனுப்பும் பணி நேற்று துவங்கி நடக்கிறது. இன்று(ஏப்.,22) ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு நாளை காலை 7:00 மணிக்கு ஓட்டுபதிவிற்கு முன்னதாக அரசியல் கட்சியினரின் பூத் ஏஜென்ட் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதில் ஏதேனும் குறை இருப்பின் மாற்று ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்த தயார் நிலையில் வைத்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* கூடுதல் பாதுகாப்பு: நான்கு சட்டசபை தொகுதிகளில் மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க ***துணை ராணுவத்தினர் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக 75 இடங்களில் 145 பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் தனி மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், ஒரு எஸ்.ஐ., உட்பட 4 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர் சேர்க்கையுடன் சட்டசபை தொகுதிகளில் தற்போதைய வாக்காளர்கள் விபரம் வருமாறு:

பாக்ஸ் செய்தி:

தொகுதி / ஆண்கள் / பெண்கள் / திருநங்கை / மொத்தம் / பூத்

பரமக்குடி(தனி) / 1,16,282 / 1,18,308 / 18 / 2,34,608 / 323

திருவாடானை / 1,40,937 / 1,42,904 / 23 / 2,83,864 / 378

ராமநாதபுரம் / 1,53,430 / 1,58,860 / 13 / 3,12,303 / 399 முதுகுளத்துார் / 1,48,876 / 1,50,080 / 02 / 2,98,958 / 414



மொத்தம் / 5,59,525 / 5,70,152 / 56 / 11,29,733 / 1514

----

Advertisement