முதலீட்டு உத்திகளை அறிய சென்னையில் கருத்தரங்கம்

ஈக்விட்டி, டெரிவேட்டிவ், தங்கம், வெள்ளி உள்ளிட்ட கமாடிட்டி வர்த்தகம், கடன் பத்திரங்கள், இ.டி.எப்., ரியல் எஸ்டேட் என ஏராளமான முதலீட்டு திட்டங்கள் உள்ளன.

இதில், எந்த முதலீடு லாபத்தை தரும்? என்பது பற்றிய குழப்பங்களுக்கு விடை தரும் நோக்கில், 'மார்க்கெட் அகாடமி' நிறுவனம் முதலீட்டாளர் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026ன் 2வது நிகழ்ச்சியை வரும் 25ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்த உள்ளது.

இந்திய நிதிச் சந்தையில் பொறுப்பான பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, ஒழுங்குமுறை ஆணையங்கள், பங்கு சந்தைகள் மற்றும் நிதித்துறை வல்லுநர்களை ஒரே மேடையில் இந்த மாநாடு இணைக்கிறது.


'என்.எஸ்.இ.,யின் தலைமை வர்த்தக அபிவிருத்தி அதிகாரி ஸ்ரீராம் கிருஷ்ணன், 'டிவி' தொகுப்பாளர் கோபிநாத், 'சாணக்யா' யுடியூப் சேனல் நிர்வாக இயக்குநர் ரங்கராஜ் பாண்டே, மூத்த ஆங்கர் ஆவுடையப்பன், என்ரிச் மனி நிறுவனத்தின் நிறுவனர் பொன்முடி, செபி ஸ்மார்ட் ட்ரெயினர் மோகன்குமார் ராமகிருஷ்ணன் உட்பட 25க்கும் மேற்பட்ட நிபுணர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

Tamil News

QR code ஸ்கேன் செய்யவும்



@block_B@ இது நிதி புரட்சி! இந்தியப் பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது முதலீட்டாளர்களுக்குத் தேவைப்படுவது சந்தைக்கான 'வாய்ப்பு' அல்ல, மாறாக முதலீடு குறித்த 'தெளிவு'. இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வெறும் தகவல்களை தராமல், நடைமுறைக்கு சாத்தியமான மற்றும் நம்பகமான முதலீட்டு உத்திகளை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.block_B

Advertisement