புறநகர் பகுதிகளில் பட்டா கிடைக்கவில்லை விண்ணப்பித்த ெபாதுமக்கள் புகார்
சென்னை: 'தமிழகத்தில் 'பெல்ட் ஏரியா' எனப்படும் புறநகர் பகுதிகளில், ஆட்சேபனை இல்லாத, புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, அரசு அறிவித்தபடி, பட்டா கிடைக்கவில்லை' என, பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள், 'பெல்ட் ஏரியா' என, வகைப்படுத்தப்பட்டன. இதில், பிற மாநகராட்சிகளில் உள்ள, புறம்போக்கு நிலங்களும் வருகின்றன.
இந்த நிலங்களில் வசிப்போர், 1962 முதல் பட்டா கோரி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு பட்டா வழங்க, அரசு முன்வராமல் இருந்தது. இந்நிலையில், 'பெல்ட் ஏரியா' பகுதிகளில் வசிப்போருக்கு, பட்டா வழங்குவதற்கான அரசாணை, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இதன்படி, பட்டா பெறுவோருக்கு, வருமான வரம்புகள் தளர்த்தப்பட்டன.
இதையடுத்து, பொது மக்கள் பட்டா கோரி, அதிக அளவில் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்கும் விதமாக, 'பெல்ட் ஏரியா'வுக்கு பட்டா வழங்க, அரசாணை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்ட விதிகளின் அடிப்படையில், தகுதி பெறும் நபர்கள், பட்டா கோரி விண்ணப்பித்தனர்.
இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாலுகா அலுவலகத்தில் நேரடியாகவும், அரசு நடத்திய முகாம்களிலும், இதற்கான மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்கள் மீது, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், தாலுகா அலுவலக அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து விசாரித்தாலும், உரிய பதில் கிடைப்பதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வீடுகள் கட்டித்தரக்கோரி பளியன்குடியில் ஓட்டு போட மறுத்த பழங்குடியின மக்கள் - பேச்சுவார்த்தைக்குப் பின் ஓட்டளித்தனர்
-
மறவபட்டியில் இரவு 7:15 வரை நீடித்த ஓட்டுப்பதிவு
-
ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
-
வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பு
-
3 இடங்களில் தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு
-
வண்ணமயமான ஓட்டுச்சாவடிகள்