இன்று ராமானுஜரின் 1,008வது திருநட்சத்திர விழா

சேலம்: ராமானுஜரின், 1,008வது ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு, சேலம், எருமாபாளையம் ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீமத் ராமானு-ஜரின் மணிமண்டபத்தில் இன்று காலை, 7:00 மணி முதல், கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், திருவாராதனம், 108 கலசங்களில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாக பூஜை செய்து ராமானுஜர் உற்சவ-ருக்கு அபிேஷகம் செய்யப்படு

கிறது.

பக்தர்கள், ராமானுஜர் நுாற்றந்தாதி பாராயணம் செய்வர். மதியம் சிறப்பு அலங்காரத்துடன் பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, பல்வேறு பாகவத குழுவினரின் நாம சங்கீர்த்-தனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பகவத் ராமானுஜ கைங்-கர்ய சொசைட்டி நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

Advertisement