இ.பி.எஸ்., முதல்வராக பொறுப்பேற்பார் ஆத்துார் அ.தி.மு.க., வேட்பாளர் நம்பிக்கை

ஆத்துார்: ஆத்துார் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசங்கரன் நேற்று, ஆத்துார் நகர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:


அ.தி.மு.க., ஆட்சியில் மட்டுமே, மக்கள் பாதுகாப்பாக வாழ்-கின்றனர். தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, சட்டவி-ரோத செயல்கள் அதிகரித்து, மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்-படுகிறது. போலீசார், அரசு துறை அதிகாரிகள், கடமையை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 234 தொகுதிக-ளிலும், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, இ.பி.எஸ்., முதல்-வராக பொறுப்பேற்பார். குடும்பத்துக்கு தலா, 10,000 ரூபாய், மக-ளிருக்கு மாதம், 2,000 ரூபாய், குடும்பத்திற்கு ப்ரிட்ஜ், மகளி-ருக்கு இரு சக்கர வாகனம் வாங்க, 25,000 ரூபாய் மானியம் உள்-பட பல்வேறு திட்ட வாக்குறுதிகளும், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஆத்துார் தொகுதி மக்களுக்கு நிறைவேற்றப்படும்.அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., ஏற்கனவே, 297 வாக்-குறுதிகளை அறிவித்தார். தற்போது வேலைக்கு செல்லும், 10 லட்சம் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டம் மூலம், 10,000 ரூபாய் வழங்கப்படும். மாணவர்கள் கல்லுாரி படிப்பை முடித்தும் போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு பெறும்படி, தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் ஏற்படுத்தப்-படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க, 24 மணி நேரமும் மாவட்ட தலைநகரில், 'வார் ரூம்' அமைக்கப்-படும். அரசு கேபிள், 'டிவி' கட்டணம், 50 சதவீதமாக குறைக்கப்-படும் உள்பட, 307 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைகள் தான் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement