மீன்பிடி தொழிலை தவிர்த்த மீனவர்கள்: கடற்கரையோரம் ஓய்வெடுத்த படகுகள்
பழவேற்காடு: சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவு இருக்க வேண்டும் என்பதற்காக, மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்ததால், மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் கடற்கரையோரங்களில் ஓய்வெடுத்தன.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ பகுதியில், 35 மீனவ கிராம மக்கள், கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. சட்டசபை தேர்தலில், மீனவ கிராமங்களில் 100 சதவீத ஓட்டுப்பதிவு இருக்க வேண்டும் என்பதற்காக, கிராம நிர்வாகிகள் கூட்டம் கூட்டி, மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தி இருந்தனர்.
நேற்று, பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்த்தனர். ஓட்டுப்பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததால் மீன்பிடி படகுகள், வலைகள் பழவேற்காடு ஏரிக்கரை மற்றும் கடற்கரையோரங்களில் பணியின்றி ஓய்வெடுத்தன.
மேலும்
-
2021 தேர்தலை விட கூடுதலாக ஓட்டளித்தோர் 20 லட்சம் பேர்!
-
பழங்குடியின பெண்கள் 'குடம் கவிழ்ப்பு' போராட்டம்
-
ஓட்டுப்பதிவால் வனத்துறை சுற்றுலா தலங்கள் மூடல்
-
நீலகிரியில் விறு ,விறுப்பாக நடந்த தேர்தல்; 78.49 சதவீதம் ஓட்டு பதிவு
-
ஊஞ்சலாடிய போது விபரீதம் ;கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் பலி
-
ஓட்டளிக்க முடியவில்லை: வனத்துறையினர் ஏமாற்றம்