43 முறை ரத்தம், உடல், கண்கள் தானம் தெற்கு த.வெ.க., வேட்பாளர் உருக்கம்
சேலம்: சேலம் தெற்கு தொகுதி, த.வெ.க., வேட்பாளர் பார்த்திபன், நேற்று பல்வேறு பகுதிகளில் இறுதிகட்ட பிரசாரம் மேற்-கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த, 30 ஆண்டாக தமிழன் தன்னார்வ இயக்கம், தளபதி விஜய் ரசிகர் மன்றம், நற்பணி மன்றம், மக்கள் இயக்கம் என, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறேன்.
நான் பிறந்து வளர்ந்த பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேராமல், தளபதி விஜய்யின் மக்கள் சேவை பாதையில் பய-ணித்து வருகிறேன்.பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் எண்ணம் இல்லை. என்-னிடம் பணமும் இல்லை. 2009ல் நான் உடல் தானம், கண்கள் தானம் செய்ய பதிவு செய்து வைத்துள்ளேன். இதுவரை, 43 முறை ரத்த தானம் செய்துள்ளேன். 30 ஆண்டு கால அரசியல் அதிகாரத்தில் இல்லாமலேயே பல்வேறு சேவைகளை செய்-துள்ளேன்.
எனக்கு, விசில் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்தால், இதை விட பல மடங்கு அதிகமாக, சேவைகளை செய்வேன். உங்கள் குடும்பத்தின் ஒருவனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
2021 தேர்தலை விட கூடுதலாக ஓட்டளித்தோர் 20 லட்சம் பேர்!
-
பழங்குடியின பெண்கள் 'குடம் கவிழ்ப்பு' போராட்டம்
-
ஓட்டுப்பதிவால் வனத்துறை சுற்றுலா தலங்கள் மூடல்
-
நீலகிரியில் விறு ,விறுப்பாக நடந்த தேர்தல்; 78.49 சதவீதம் ஓட்டு பதிவு
-
ஊஞ்சலாடிய போது விபரீதம் ;கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் பலி
-
ஓட்டளிக்க முடியவில்லை: வனத்துறையினர் ஏமாற்றம்