தொகுதி வளர்ச்சி பெற நடவடிக்கை மேற்கு பா.ம.க., வேட்பாளர் பேச்சு

சேலம்: சேலம் மேற்கு தொகுதி, பா.ம.க., வேட்பாளர் கார்த்தி, நேற்று செட்டிச்சாவடி, அழகாபுரம், சூரமங்கலம், புதுார் ரோடு, கருக்கல்-வாடி, கே.ஆர்.தோப்பூர், முத்துநாயக்கன்பட்டி பகுதிகளில் மக்-களை சந்தித்து மாம்பழ சின்னத்துக்கு ஓட்டு கேட்டு
பேசியதாவது:


சேர்வராயன் மலை அடிவாரத்தில் வனத்தையும், நகர மக்களின் நலனையும் சீர் கெடுத்து வரும் செட்டிச்சாவடி குப்பைமேட்டை, சட்ட ஆலோசனை பெற்று அகற்றுவதோடு, பாதுகாப்பான மாற்-றுத்திட்டத்தை ஏற்படுத்தி கொடுப்பேன்.மாமாங்கத்தில் ஜவுளி பூங்கா பெயரில் சாயப்பட்டறைக்கு அனு-மதி அளித்துள்ளது தவறு. நான் வெற்றி பெற்றதும், சாயப்பட்ட-றையை முற்றிலும் தடுத்து நிறுத்தி, விவசாயத்தையும்,
மக்களின் நீர் ஆதாரத்தையும் பாதுகாப்பேன்.
இ.பி.எஸ்., முதல்வராக பொறுப்பேற்றதும், மேட்டூர் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரிவுபடுத்தி கொடுத்து, மேற்கு தொகுதி வளர்ச்சி பெற நடவடிக்கை எடுப்பேன். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 5ம் வரிசையில் உள்ள மாம்பழ சின்னத்தில் ஓட்ட-ளித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளான, அ.தி.மு.க., ராமராஜ், பா.ம.க., மாவட்ட செயலர் சரவணகந்தன், சூரமங்கலம் பகுதி செயலர் சுரேஷ், டிவிஷன் செயலர் வடிவேல், தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட பொருளாளர் ஜனனி, ஊடக பேரவை தில்லைராஜா, மாவட்ட இளைஞர் சங்க தலைவர் இள-வரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement