சுவரில் போஸ்டர், சின்னம் பல கட்சிகள் மீது வழக்கு

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி, சந்தைப்பேட்டையை சேர்ந்த பிர-பாகரன் மனைவி லீலாவதி, 30. இவர், த.வெ.க.,வில், பனமரத்-துப்பட்டி ஒன்றிய துணை செயலராக உள்ளார். இவர் அனுமதி-யின்றி, அப்பகுதி சுவர்களில் கட்சி சின்னம் வரைந்ததாக, கொண்-டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


அதேபோல் இரும்பாலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ-மனை பகுதியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக, ராமதாஸ் அணியினர் மீது இரும்பாலை போலீசார் வழக்குப்பதிந்தனர். நைனாம்பட்டி, மல்லேஸ்வரன் கோவில் சுவரில் கட்சி சின்னம் வரைந்ததாக த.வெ.க., மீது ஆட்டையாம்-பட்டி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். அம்மாபேட்டை, தனியார் கல்லுாரி சந்திப்பில், கட்சி சின்னம் வரைந்ததாக, தி.மு.க., மீது அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்துள்-ளனர். அஸ்தம்பட்டி சுகாதார ஆய்வாளர் அலுவலக சுவரில் போஸ்டர் ஒட்டியதாக பா.ம.க., மீது, அஸ்தம்பட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement