செங்கை ஏழு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு.. அமோகம்   17.95 சதவீதம் அதிகரிப்பால் வேட்பாளர்கள் கலக்கம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், 85.32 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலை விட 20.86 சதவீதம் அதிகமாக ஓட்டு பதிவாகி உள்ளதால், வாக்காளர்கள் என்ன மாதிரியான மனநிலையில் ஓட்டளித்து உள்ளனரோ என, வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி என மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில், மொத்தம் 23.04 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார் தொகுதியில் 27 பேர்; பல்லாவரம் தொகுதியில், 23 பேர் உட்பட, மொத்தம் 113 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில், 3,074 ஓட்டுச்சாவடிகளில் அமைக்கப்பட்டன.

செங்கல்பட்டு எஸ்.பி., அய்மன் ஜமால் தலைமையில், துணை ராணுவத்தினர் உட்பட, 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து ஓட்டுச்சாவடிகளும், 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

Tamil News
Tamil News
மாவட்டத்திற்கு 4,245 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் பணியில், 14,469 அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஓட்டுப்பதிவு நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கி, மாலை 6:00 மணிக்கு முடிந்தது.

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் உள்ள அனுமந்த புத்தேரி நகராட்சி ஆரம்பப் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் ஆகியோர், தங்கள் ஓட்டை பதிவு செய்தனர்.

மாவட்டத்தில், காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய போது, 37 ஓட்டுச்சாவடி மையங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது.

இதற்கு மாற்றாக மின்னணு இயந்திரங்கள், தேர்தல் அதிகாரிகள் வழங்கினர். இதனால், ஓட்டுப்பதிவு அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

காலையில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமாக வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

ஓட்டுப்பதிவு முடிவில், 85.32 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது பதிவான, 64.46 சதவீதத்தை விட, 20.86 சதவீதம் அதிகம்.

வழக்கத்தை விட ஓட்டு பதிவு அதிகம் என்பதால், வாக்காளர்கள் எந்த மாதிரியான முடிவில் ஓட்டளித்தனர் என, கணிக்க முடியாத நிலை உள்ளது.

இதனால், தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமா, எதிரணிக்கு போய்விடுமோ என்ற கலக்கத்தில், முக்கிய கட்சி வேட்பாளர்கள் உள்ளனர். இதற்கான விடை வரும் மே 4ல் தெரிய வரும்.

@block_B@ 2021 சட்டசபை தேர்தல் பதிவான ஓட்டு சதவீதம்; சோழிங்கநல்லுார் 55.51 பல்லாவரம் 60.86 தாம்பரம் 59.48 செங்கல்பட்டு 63.54 திருப்போரூர் 76.36 செய்யூர்- தனி 77.85 மதுராந்தகம்- தனி 80.94 மொத்தம் 64.46block_B

@block_B@ 2026 சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதம் தொகுதி - மொத்த வாக்காளர்கள் - வாக்குகள் - சதவீதம் சோழிங்கநல்லுார் 5,53,905 - 4,32,766 - 78.13 பல்லாவரம் 3,36,963 - 2,73,109 - 81.05 தாம்பரம் 3,30,060 2,70,385 - 81.92 செங்கல்பட்டு 3,72,839 3,12,626 - 83.85 திருப்போரூர் 2,94,410 2,48,865 - 84,53 செய்யூர் தனி 2,03,998 1,74,765 - 85.67 மதுராந்தகம்-தனி 2,12,639 1,86,782 - 87.84 மொத்தம் 23,04,814 - 18,99,298 - 82.41block_B

Advertisement