இதே நாளில் அன்று
ஏப்ரல் 24, 1937
தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலம் கிராமத்தில், ராமசாமி அய்யர் - ஜானகி தம்பதியின் மகளாக, 1937ல் இதே நாளில் பிறந்தவர் சூலமங்கலம் ஜெயலட்சுமி.
இசை பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், கே.ஜி.மூர்த்தி, பத்தமடை எஸ்.கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் உள்ளிட்டோரிடம், தன் தங்கை ராஜலட்சுமியுடன் இணைந்து இசை நுணுக்கங்களை கற்றார்.
இருவரும் இணைந்து பக்தி பாடல்களுக்கு இசையமைத்து, பக்தி உணர்வுடனும், தெளிவான உச்சரிப்புடனும் கச்சேரிகளில் பாடி புகழ் பெற்றனர். இவர்கள் பாடிய, 'கந்த சஷ்டி கவசம்' தமிழகம் முழுதும் இன்றும் ஒலிக்கிறது.
இவர்கள், டைகர் தாத்தாச்சாரி, தரிசனம், மகிழம்பூ, பிள்ளையார், பால்குடம், பாதபூஜை உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்தனர். இவர், 'கலைமாமணி, குயில் இசை திலகம், இசையரசி' உள்ளிட்ட விருதுகளை பெற்றார்.
டி.எம்.எஸ்., - எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்டோர் பாடிய, 'ஏழுமலைவாசா வெங்கடேசா, கண்ணாலே பார், கல்யாணமாம் கல்யாணம், இது மாலை நேரத்து மயக்கம்' உள்ளிட்ட பாடல்கள், பெண் இசையமைப்பாளர்களான இவர்களை பிரபலமாக்கின. இவர், தன் 80வது வயதில், 2017, ஜூன் 29ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
மேலும்
-
ஓட்டளித்தவர்கள் சென்னை திரும்ப சிறப்பு ரயில்
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
-
75,064 ஓட்டுச்சாவடிகளும் 'சிசிடிவி' வாயிலாக கண்காணிப்பு
-
தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்
-
அன்புமணி, ராமதாஸ் வழக்கை விசாரிக்கும் சிவில் நீதிபதி மாற்றம்
-
புதிதாக 5 'அம்ரித் பாரத்' ரயில்கள்; ஐ.சி.எப்., தயாரிக்க வாரியம் அனுமதி