தலைநகர் சென்னையில் ஓட்டுப்பதிவு 84 சதவீதமாக எகிறியது! ஸ்டாலின், விஜய் தொகுதிகளிலும் அபாரம்
- நமது நிருபர் குழு -
சென்னை மாவட்டத்தில், எப்போதும் இல்லாத அளவிற்கு ஓட்டுப்பதிவு 84 சதவீதமாக உயர்ந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், விஜய் போட்டியிடும் தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு அதிகரித்துள்ளது. வாக்காளர்கள் வரிந்து கட்டி ஓட்டுச்சாவடிகளுக்கு படையெடுத்ததால், முடிவு எப்படி இருக்குமோ என தெரியாமல், வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் களில், குறைந்த அளவு ஓட்டுப் பதிவாகும் மாவட்டமாக சென்னை இருந்து வந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 59.40 சதவீதம் ஓட்டுகளே பதிவாகின.
அப்போது, சென்னை மாவட்டத்தில், 40.04 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர். இதில், தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில், இறந்தோர், இடம் பெயர்ந்தோர் உள்ளிட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இறுதியாக, 13 லட்சத்து 95,716 ஆண் வாக்காளர்கள், 14 லட்சத்து 96,921 பெண் வாக்காளர்கள், 868 இதர வாக்காளர்கள் என, 28 லட்சத்து 93,505 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 74,089 பேர், 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களாக உள்ளனர்.
இத்தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - நா.த.க., - த.வெ.க., ஆகிய நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதன்படி, 16 சட்ட சபை தொகுதிகளில், 419 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
அதிகபட்சமாக, த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 47 பேர்; முதல்வர் போட்டியிடும் கொளத்துார் தொகுதியில் 35 பேர் போட்டியில் உள்ளனர்.
அதேபோல், உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் 26; அமைச்சர்கள் சுப்பிரமணியன் போட்டியிடும் சைதாப்பேட்டையில் 15; சேகர்பாபு போட்டியிடும் துறைமுகம் தொகுதியில் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஓட்டுப்பதிவு பணிக்காக, தேர்தல் நடத்தும் அலுவலர், போலீசார் என, 30,000க்கும் மேற்பட் டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரே இடத்தில் பல ஓட்டுச்சாவடிகள் இருக்கும் இடங்களில், வாக்காளர்களுக்கு வழிகாட்டும் வகையில், வண்ண குறியீடு வரையப்பட்டிருந்தது.
வாக்காளர்களின் வசதிக்காக நிழற்பந்தல், குடிநீர் வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் வசதிக்காக வீல் சேர் உள்ளிட்டவையும் ஏற் படுத்தப்பட்டு இருந்தன.
காலை 7:00 மணி முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுப் பதிவு செய்தனர். அதனால், நண்பகல் 1:00 மணியள வில், சென்னையில் ஓட்டுப் பதிவு 50 சதவீதத்துக்கு மேல் கடந்தது.
கடந்தாண்டுகளில், மாலை வரையில், 60 சதவீததுக்கும் கீழ் பதிவான ஓட்டுப்பதிவு, இந்தாண்டு பெருமளவு அதிகரித்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில், 80 சதவீததுக்கு மேல் ஓட்டுப்பதிவாகி உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் வசதிக்காக, 5 இடங்களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது. அதேபோல், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, புளியந்தோப்பு, ராயபுரம், காசிமேடு, துறைமுகம், ஐஸ்ஹவுஸ், கிருஷ்ணாம்பேட்டை, சேப்பாக்கம், சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்து மக்கள் ஓட்டளித்தனர். இதன் வாயிலாக, சென்னையில் ஓட்டுப்பதிவு, 83.73 சதவீதமாக பதிவாகி உள்ளது.
முதல்வரின் கொளத்துார் தொகுதியில் 86.11 சதவீதம்; த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், 89.79 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்கள் முன் மூடி 'சீல்' வைக்கப்பட்டு, உரிய போலீஸ் பாதுகாப்புடன், அண்ணா பல்கலை, ராணிமேரி கல்லுாரி, லயோலா கல்லுாரி ஆகிய மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டுகள், மே 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

@block_B@
* சோழிங்கநல்லுார் தொகுதியில் ஓட்டு போட சென்ற சார்லஸ் என்ற இளைஞரின் ஓட்டு, ஏற்கனவே போடப்பட்டதாகக்கூறி, அவருக்கான ஓட்டு மறுக்கப்பட்டது. அவர், 'நான் போடவில்லை' என கண்ணீர் மல்க கூறியும், அவருக்கான ஓட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை
* திரு.வி.க.நகர் தொகுதியில் ஓட்டு போட சென்ற அமுலு என்ற பெண்ணின் ஓட்டையும் மற்றொருவர் போட்டு விட்டதால், அவருக்கு ஓட்டு மறுக்கப்பட்டது. இதனால், அ.தி.மு.க., - த.வெ.க.,வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது
* ராயபுரம் தொகுதியை சேர்ந்த கண்ணன் என்ற வழக்கறிஞரின் ஓட்டும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதால், அதிர்ச்சியடைந்த அவர், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
* மதுரவாயல் தொகுதியை சேர்ந்த உமா மகேஷ்வரி என்பவரது ஓட்டை மற்றொருவர் பதிவு செய்ததால், அவருக்கு ஓட்டு மறுக்கப்பட்டது
* இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஓட்டுகள், குறிப்பிட்ட கட்சிக்கு தான் போகும் என, அவர்களின் ஓட்டுகளை குறிவைத்து, பல தொகுதிகளில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், தரமணியில் 40 வயது நபரின் ஓட்டை வேறு நபர் போட்டதால், அவருக்கு 'டெண்டர்' ஓட்டு பதிவு செய்யும் வசதி அளிக்கப்பட்டது.block_B
@block_Y@
* வேளச்சேரியில், 60 வயது பெண்ணின் ஓட்டை வேறு ஒரு பெண் போட்டு சென்றதாக எழுந்த பிரச்னையில், காங்., - அ.தி.மு.க.,வினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், அங்கு அரை மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமானதால், இதர வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து அவதிப்பட்டனர்
* இ.சி.ஆர்., உத்தண்டியில், ஓட்டுச் சாவடியின் வெளியே, அ.தி.மு.க.,வினர் ஓட்டுச்சீட்டு வழங்கிய நிலையில், அதில் பணம் வைத்து கொடுப்பதாக, தி.மு.க.,வினர் அவற்றை பறித்ததுடன், பெண்களையும் அநாகரிகமாக பேசினர். இதனால், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. பின், கானத்துார் போலீசில், அநாகரிகமாக பேசியதாக அ.தி.மு.க.,வினரும், ஓட்டுச்சீட்டுக்குள் பணம் வைத்து கொடுத்ததாக தி.மு.க.,வினரும் மாறிமாறி புகார் அளித்தனர்
* அண்ணா நகர் தொகுதியில், கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், தி.மு.க., வேட்பாளர் சிற்றரசு மற்றும் நிர்வாகிகள் ஓட்டுச் சாவடிக்குள் சென்றனர். அப்போது, த.வெ.க., பூத் ஏஜென்டுகள் மற்றும் கட்சியினரும் உள்ளே செல்ல முயன்றபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த த.வெ.க.,வினர் 30 பேர், கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்திய பின், மீண்டும் ஓட்டுச்சாவடி மையத்திற்குள் சென்றனர்.block_Y
@block_P@
* தாம்பரம், பொழிச்சலுாரில் மின்னணு இயந்திரங்கள் பழுதானதால், 2 மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
* பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பிரின்ஸஸ் மெட்ரிக் பள்ளி ஓட்டுச்சாவடிகளில், இரண்டு மின்னணு இயந்திரங்களும் பழுதானதால், காலை 8:35 மணிக்கு நிறுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு, பழுதை சரி செய்த பின், மீண்டும் 8:50 மணிக்கு தொடங்கியது.
* அம்பத்துார் தொகுதிக்கு உட்பட்ட, அண்ணா நகர், சி.எஸ்.ஐ., இவார்ட்ஸ் பள்ளியில், காலை 10:30 மணியளவில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இரண்டு மணி நேரம் வரை ஓட்டுப்பதிவு நடைபெறாததால், வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து சோர்வடைந்தனர். அதேபோல், பல்வேறு இடங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அவ்வப்போது பழுது ஏற்பட்டு, 10 நிமிடங்களில் சரி செய்யப் பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது.block_P
@block_P@
தமிழக சட்டசபை தேர்தல் நடந்த நேற்று, சுப முகூர்த்த நாள் என்பதால், பல இடங்களில் திருமணங்கள் நடந்தன. அதன்படி, ராமாபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் - காயத்ரி ஆகியோருக்கு, நேற்று திருமணம் நடந்தது. இருவரும், மணக்கோலத்தில் ஓட்டுப் பதிவு செய்தனர். திருமுடிவாக்கத்தை சேர்ந்த அருள் புகழேந்தி - கண்மணி தம்பதியும், மணக்கோலத்தில், அதே பகுதியில் இருக்கும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப் பதிவு செய்தனர்.block_P
@block_B@
அம்பத்துார் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பூர்ணிமாவுக்கு ஓட்டு போட்டதை, பெண் ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால், தேர்தல் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பெண் யார், எந்த ஓட்டுச்சாவடியில் வீடியோ எடுத்து பதிவிட்டார் என, தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.block_B
@block_Y@
சென்னையில், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்களை கவரும் வகையில், 'செல்பி பாயின்ட்' அமைக்கப்பட்டது. அங்கு, இளம் வாக்காளர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஓட்டு போட்ட பின், தங்கள் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதேநேரம், அரும்பாக்கம், வில்லிவாக்கம் உள்ளிட்ட ஓட்டுச்சாவடிகளில், 'செல்பி பாயின்ட்' இல்லாததால், இளைஞர்கள், இளம்பெண்கள் ஏமாற்றமடைந்தனர்.block_Y
@block_B@
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் பள்ளியில், வீல் சேர் வசதியும், அவற்றை இயக்க ஆட்கள் இருந்தும், உதவி செய்ய முன் வராததால், நடக்க முடியாதவர்கள், காலில் கட்டுப்போட்டு வந்தவர்கள் மிகுந்த சிரமத்தில் ஓட்டுப்பதிவு செய்தனர்.block_B
மேலும்
-
தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ., மார-டைப்பில் பலி
-
கோவில் 'பதி'க்கு செல்ல முடியாதபடி வேலி நெடுஞ்சாலையில் ஒரு சமுதாயத்தினர் மறியல்
-
கேமராவில் உதயநிதி என ஆங்கிலத்தில் ஒலித்ததால் 30 நிமிடம் ஓட்டுப்பதிவு பாதிப்பு
-
மணக்கோலத்தில் ஓட்டுச்சாவடி வந்து ஜனநாயக கடமையாற்றிய மணப்பெண்
-
6 மணிக்கு மேல் ஓட்டு போட அனுமதி கேட்டு வாக்காளர்கள் வாக்குவாதம்
-
மூதாட்டிக்கு தவறான சின்னம் கூறியதால் வாக்குவாதம்