'பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முன் மொழிந்தவன் நான்'

கிருஷ்ணகிரி: ''பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டுக்-கான மசோதா, மத்திய அமைச்சராக இருந்த-போது முன்மொழிந்தவன் நான்,'' என, ராஜ்ய-சபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை கூறினார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்த-கம்பள்ளி அரசு துவக்கப்பள்ளி ஓட்டுப்பதிவு மையத்திற்கு, தன் ஜனநாயக கடமையாற்ற வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 1998, ஜூலை, 14ல் மத்திய, பா.ஜ., ஆட்சி கூட்டணியில் இருந்த, அ.தி.மு.க.,வில், நான் சட்ட அமைச்சராக இருந்தபோது தான் மகளிருக்கு, 33 சதவீத இடஒதுக்கீட்டிற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயல-லிதா அறிவுறுத்தல் படி, அதை முன்மொழிந்-தவன், இந்த கிராமத்தில் பிறந்து அமைச்சராக இருந்த நான் என்பதில், பெருமை கொள்கிறேன். அது பரிசீலனையில் இருந்து, ஓட்டெடுப்பில் தற்-போது தோல்வி அடைந்துள்ளது.
தற்போது, பர்கூர் சட்டசபை தேர்தலில் போட்டி-யிட வாய்ப்பு கேட்டேன். ஆனால் எனக்கு ராஜ்ய-சபா எம்.பி.,யை இ.பி.எஸ்., வழங்கி, 'வரும் காலங்களில் மகளிர் மசோதா உள்ளிட்ட பல்-வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதற்கு டில்லியில், அ.தி.மு.க., சார்பில் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்' எனக்கூ-றினார். தமிழகத்தில், 4 முனை போட்டி என்ற ஒன்றெல்லாம் கிடையாது. இங்கு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., இடையே மட்டுமே போட்டி. இதில், அ.தி.மு.க., 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். தமிழக முதல்வராக இ.பி.எஸ்., பொறுப்பேற்பது உறுதி. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement