தளியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா இ.கம்யூ., - த.வெ.க.,வினர் 6 பேர் கைது

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, பணம் பட்டு-வாடா செய்ததாக, இ.கம்யூ., கட்சியினர், 5 பேர், த.வெ.க., நிர்வாகி ஒருவர் என, மொத்தம், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், இ.கம்யூ., வேட்பாளர் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பா.ஜ., கட்சி சார்பில் நாகேஷ்-குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இ.கம்யூ., கட்சி தான் வெற்றி பெறும் என, பொதுவான கருத்து நிலவி வந்தாலும், பா.ஜ., கட்சி சார்பில் நடந்த தீவிர தேர்தல் பிரசாரத்தால், அக்கட்-சியின் கையும் ஓங்கியுள்ளது.


இதனால், இ.கம்யூ., கட்சியினர் வாக்காளர்-களை கவர, பணப்பட்டுவாடா செய்வதாக குற்-றச்சாட்டு எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தேன்கனிக்கோட்டை அருகே பென்-னங்கூர் பகுதியில், இ.கம்யூ., வேட்பாளர் ராமச்-சந்திரனுக்கு ஓட்டு போடுமாறு கூறி, வாக்காளர்-களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை அறிந்த, தளி தொகுதி தேர்தல் பறக்கும் படை-யினர், அப்பகுதிக்கு சென்று நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டு-வாடா செய்ததாக, பென்னங்கூரை சேர்ந்த சுப்-பிரமணி, 50, அதே பகுதியை சேர்ந்த காவேரி-யப்பா, 70, சப்ஜன், 56, அலேநத்தத்தை சேர்ந்த நடேஷ், 35, எல்லையூரை சேர்ந்த சதாகத், 27, ஆகிய, 5 பேரை பிடித்து, போலீசில் ஒப்படைத்-தனர். அவர்களை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர். ஒரு லட்சத்து, 9,080 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு கருவூ-லத்தில்
ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல், தேன்கனிக்கோட்டை அண்ணா நகரில், ஓசூர் ராஜாஜி நகரை சேர்ந்த மனோஜ்-குமார், 26, என்பவர், த.வெ.க., வேட்பாளரை ஆத-ரித்து, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தார். அவரை பறக்கும் படையினர் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அவரை கைது செய்தனர். 13,000 ரூபாய் பறிமுதல் செய்-யப்பட்டது.

Advertisement