ஈரான் உடனான போர் நிறுத்தத்தை நீட்டித்தார் டிரம்ப்
வாஷிங்டன்: ஈரான் உடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த பிப்.,28 ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக தாக்குதல் நடத்தின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்க துவங்கியது. ஹார்மூஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. சர்வதேச நாடுளின் அழுத்தம் காரணமாக, ஈரானுடன் தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது. இது இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் மத்தியஸ்தத்துடன், சமீபத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே முதல் கட்ட பேச்சு நடந்தது.முதலில் இரு தரப்பும், பாகிஸ்தானுடன் பேசின. அதில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் நேரடியாக பேசின. தொடர்ந்து, 21 மணி நேரம் நடந்த பேச்சு, உடன்பாடு எட்டப்படாமல் முடிந்தது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.
பேச்சுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையேயான கருத்து மோதல் தொடர்ந்தது.அந்தப் பகுதியில் இருந்து அமெரிக்க படைகள் முழுதும் விலக்கிக் கொள்ள ஈரான் வலியுறுத்தியது. இது ஏற்கப்படாததால், ஜலசந்தியை ஈரான் முழுதும் முடக்கியது. இதன் காரணமாக அமைதி பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது.இதனால், அமைதி பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்குமா அல்லது மீண்டும் தாக்குதல் துவங்குமா என்ற பரபரப்பு சர்வதேச நாடுகள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஈரான் அரசு பிளவுபட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் கோரிக்கையாலும், அமைதி ஒப்பந்தம் சார்ந்து ஒருங்கிணைந்த முன்மொழிவை ஈரான் முன்வைக்கும்வரையில் இந்த போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறது. ஈரான் கடற்படை முற்றுகையை தொடரவும், மற்ற நிலைகளிலும் தயார்நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டு உள்ளேன். ஈ ரான் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, அது குறித்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும் வரை, அது எத்தகைய முடிவாக இருந்தாலும் போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒத்திவைப்பு
இதற்கு இடையே, அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லவிருந்த துணை அதிபர் வான்ஸின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆசிம் முனீர் மற்றும் செபஸ் ஷரீஃப் க்கு ஒரு மசால் தோசை பார்சல்...பாவம் இங்கே ஒடனே thoppul கொடி உறவுகள் வெகுண்டு எழும்
வேற வழி?
ஒரு கதை நினைவுக்கு வருகின்றது .ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கரையில் உள்ள கிராமங்கள் எல்லாம் அடித்துச்செல்லப்படுகின்றன .இரு நண்பர்கள் ஆற்றின் மேலுள்ள பாலத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பாத்துக்கொண்டிருக்கின்றார்கள் .கருப்பாக ஒரு இரும்பு பெட்டிபோல ஒன்று மிதந்து செல்கின்றது .அது பணப்பெட்டியாக இருக்கலாம் என்று நினைத்து ஒருவன் ஆற்றில் குதித்து அதை பிடிக்கின்றான் .அவனும் அதனோடே அடித்துச்செல்லப்படுகின்றான் .பலத்தின்மேலுள்ளவன் கத்துகிறான் .டே விட்டுட்டுவந்திடுற என்று .கரையில் ஓடிகொண்ண்டே. அவன் சொல்லுகிறான் டே நான் அதை எப்போதோ விட்டுவிட்டேன் அதுதான் என்னை விடவில்லை என்று .அது என்ன என்று கேட்கிறான் .அதுஒரு கரடி என்று புலம்புகிறான் .அந்த கதையோடு இந்தக்கதையும் ஒத்துபோகவில்லையா ?
Iran is a honey badger
ட்ரும்பு பாவம் ஏடாகூடமா காலை விட்டுட்டு இப்போ முழுங்கவும் முடியாம, துப்பவும் முடியாம முழிக்கிறார்.
ஹர்மஸ் நீரிணைப்பு உடனே திறக்க வேண்டும். பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது
டிரம்ப் ஒதுங்கிப்போனால் நீரிணை திறக்கப்படும், அமரிக்க தவிர மற்றநாடுகளின் கைகளில் தான் இருக்கு திறபதுக்கு.மேலும்
-
ஏப்ரல் 30ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
அபுதாபியில் யுஏஇ அதிபரை சந்தித்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
-
கொழும்பு வந்த புத்த துறவிகளிடம் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வெள்ளை மாளிகை பெண் அதிகாரி முன்கூட்டியே சொன்னது எப்படி?
-
அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்; ஈரான் அதிபர் திட்டவட்டம்
-
நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது