நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது
புதுடில்லி: இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடுவதாக இருந்த நிலையில், நாளைக்கு (ஏப்ரல் 27) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 28 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஏப்ரல் 27) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதியை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.