கொழும்பு வந்த புத்த துறவிகளிடம் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

43

கொழும்பு: தாய்லாந்திலிருந்து கொழும்பு வந்த புத்த துறவிகள் 22 பேரிடம் இருந்து ரூ.110 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று இரவு (ஏப்ரல் 25) போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு வந்த தகவலின் பேரில், தாய்லாந்தில் இருந்து இலங்கையின் கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த புத்த துறவிகள் 22 பேரின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. அதில், ரூ.110 கோடி மதிப்பிலான 110 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


புத்த துறவிகள் கொண்டு வந்த பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளின் ரகசிய அறைகளில் இந்தப் போதைப்பொருட்கள் மறைத்து கடத்தி வரப்பட்டுள்ளது. ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 5 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டது.


அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஸ்பான்சர் ஒருவர் அளித்த டிக்கெட்டின் மூலம் இவர்கள் தாய்லாந்தின் பாங்காங் சென்ற தெரிய வந்தது. மேலும், புத்த துறவிகளின் செல்போன்களை ஆய்வு செய்த போது, வெளிநாடுகளில் இவர்கள் வழக்கமான உடை அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்துள்ளன. இதையடுத்து, புத்த துறவிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Advertisement