துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வெள்ளை மாளிகை பெண் அதிகாரி முன்கூட்டியே சொன்னது எப்படி?
நியூயார்க்: அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பாக, இன்று இரவு துப்பாக்கி சூடு நடக்கும் என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறி இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பிரபலமான ஹில்டன் ஹோட்டல் உள்ளது. இங்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்கும் நிருபர்களுக்கு இரவு விருந்து நடந்தது. அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, துணை அதிபர் வேன்ஸ் இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தனர்.
விருந்தின் நடுவே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் பாதுகாவலர்கள் வேகமாக அங்கிருந்து டிரம்ப் மற்றும் அவரது மனைவியை பத்திரமாக அழைத்து சென்றனர். தற்போது இரவு விருந்துக்கு முன்பு, வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஆற்றிய உரையின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ''அதிபர் டிரம்ப் சண்டைக்குத் தயாராக இருக்கிறார், நான் உங்களுக்குச் சொல்கிறேன். இன்றிரவு டிரம்பின் உரை வழக்கமான பாணியில் இருக்கும். அது வேடிக்கையாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும். இன்று இரவு துப்பாக்கிச் சூடு நடக்கும். அனைவரும் இதைக் காணுங்கள், இது மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது.
அதைக் கேட்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று நிகழ்ச்சிக்கு முன்பு லீவிட் கூறினார். There will be some shots fired tonight என்று கரோலின் லீவிட் கூறிய கருத்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தற்செயல் நிகழ்வின் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
அதிபர் டிரம்பின் உரை, காரசாரமாக இருக்கப் போகிறது என்பதை தெரிவிக்கும் வகையில் கரோலின் இவ்வாறு கூறினார். ஆனால் உண்மையிலேயே துப்பாக்கிச் சூடு நடந்துவிட்டது.
இத்தகைய சூழலில், கரோலின் லீவிட் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
அங்கேயும் ஜோசியம் சொல்பவர்கள் வந்துவிட்டார்களா... ?
இவர் அறிக்கையால் தெரிவது, நான் சுடுவதுபோல நடிப்பேன். நீங்க எல்லாம் ஓடுங்க என்று.
குடமுருட்டி குண்டு ஞாபகத்துக்கு வருது
டிரம்ப் அமெரிக்க சுடலை , நாடக பித்தன் .
ஒத்திகை நாடகம் .. பெண் அதிகாரி டிரம்ப் சுட்டவன் இடையே pre plan ..
அப்ப சீக்கிரம் இருக்கு பண்டிகை
நம்மூரில் ஒருவர் சட்டசபையில் தாமாகவே சட்டையை கிழித்து கொண்டாரே, அது போல் டிரம்ப் அவர்கள் விளம்பரத்திற்காக தானே செய்து கொண்டாரோ?
அய்யோ டிரம்ப் தப்பித்து விட்டார்!
அங்கேயும் இருக்கிறார்களா