மணக்குள விநாயகர் கல்லுாரியில் பணி ஆணை வழங்கும் விழா 

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.

மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் கலந்து கொண்டனர். கல்லுாரியின் இயக்குநர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார். வேலைவாய்ப்பு டீன் கைலாசம் அறிக்கையை சமர்ப்பித்தார்.

டீ.சி.எஸ்., தலைமை ஆர்க்கிடெக்ட் ஜுடே ரிச்சர்ட் கலந்து கொண்டு, மாணவர்கள் வேலைக்கு சேர்ந்த முதல் 90 நாட்களில் தங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டும். தொழில் நுட்பத்திறன், தொடர்பு திறன் மற்றும் பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்டால் தான் இனி வரும் காலங்களில் நிறுவனங்களின் தொழில்நுட்பம் சார்ந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யமுடியும், என்றார்.

தொடர்ந்து, தேர்வான மாணவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.

இதில் 2025- 26ம் ஆண்டு நடந்த கல்லுாரி வளாக நேர்முக தேர்வில் டீசிஸ், ஹெக்சாவேர், சிடீஸ், ஜோஹோ போன்ற 60க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில் 750 மாணவ, மாணவிகள் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்நிறுவனங்கள் மாணவர்களுக்கு ரூ. 3.5 முதல் 13 லட்சம் வரை சம்பளம் வழங்குகிறது.

பொருளாளர் ராஜராஜன், மாணவர்கள் ஏ.ஐ., தொழில் நுட்பத்துடன் சார்ந்த கோடிங் எழுத எளிதாக கற்றுக்கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கேற்ப கடினமாக உழைத்து, தங்களுடைய திறனை வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.

விழாவில் கல்லுாரியின் அனைத்து டீன்கள், தேர்வு துறை கட்டுப்பாட்டாளர், துறைத்தலைவர்கள் மற்றும் அனைத்துத் துறை வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏ.ஐ.டி.எஸ் துறைத் தலைவைர் மதுசூதனன் நன்றி கூறினார்.

Advertisement