ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
டோக்கியோ: ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் கடந்த வாரம் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அதை தொடர்ந்து 'மெகா நிலநடுக்கம்' ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஜப்பானின் வடக்குத் தீவான ஹொக்கைடோவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, 6.2 ரிக்டர் அளவுக்கு இது பதிவானது. ஹொக்கைடோ தீவில் உள்ள சரபெட்சு நகருக்கு மேற்கே, 18 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலப்பரப்பிலிருந்து, 81 கி.மீ., ஆழத்தில் இந்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருட்சேதமோ ஏற்படவில்லை. இந்தப் பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்