சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி

கார்டூம்: சூடான் நாட்டின் ஜூபா நகர் அருகே நடந்த விமான விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர்.

வட ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானின் தலைநகரான ஜூபாவின் புறநகர் பகுதியில் இருந்து நேற்று ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

தீவிர தேடுதலுக்கு பிறகு ஜூபாவிலிருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 13 பயணியர் மற்றும் ஒரு பைலட் என மொத்தம் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதில் கென்யா நாட்டைச் சேர்ந்த இருவரும் அடங்குவர். விமானம் விபத்துக்குள்ளானதற்கு மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement