பல்கலை., சமுதாய கல்லுாரியில் பூமி தினம் கொண்டாட்டம்
புதுச்சேரி: லாஸ்பேட்டை, பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில், மேலாண்மைத் துறை மற்றும் பூமி அறிவியல் அமைச்சகம் இணைந்து நடத்திய ஒரு வார கால உலகப் பூமி தின விழா நேற்று நிறைவடைந்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று நடந்த விழாவிற்கு சமுதாயக் கல்லுாரியின் முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழகப் பூமி அறிவியல் துறை பேராசிரியர் ராஜ்நீஷ் புத்தானி, டச் எனர்ஜி டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர் சண்முகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
எங்கள் சக்தி எங்கள் பூமி என்ற தலைப்பில் மின்னணு கழிவுகள், பிளாஸ்டிக் மறுசுழற்சி, காடு ஆரோக்கிய மதிப்பீடு போன்றவற்றில் நிபுணர் சொற்பொழிவுகள், மனித சங்கிலி, வளாக சுத்தப்படுத்தல் இயக்கம், பிளாஷ் மோப், ஆங்கிலம் மற்றும் தமிழில் கட்டுரை போட்டி, போஸ்டர் கண்காட்சி, சிட்ரஸ் கிளீனர் தயாரிப்பு பயிற்சி, துணி மறுசுழற்சி பயிற்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆதரவுடன் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லுாரி மாணவர்களின் நடனம் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நிறைவு விழாவில், பேராசிரியர் லதா ஷுக்லா கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை மேலாண்மைத் துறைத் தலைவர் பாரதி, இணைப் பேராசிரியர் அர்ஜுனன், சத்யமூர்த்தி மற்றும் கல்லுாரி ஊழியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
வீடுகள் கட்டித்தரக்கோரி பளியன்குடியில் ஓட்டு போட மறுத்த பழங்குடியின மக்கள் - பேச்சுவார்த்தைக்குப் பின் ஓட்டளித்தனர்
-
மறவபட்டியில் இரவு 7:15 வரை நீடித்த ஓட்டுப்பதிவு
-
ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
-
வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பு
-
3 இடங்களில் தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு
-
வண்ணமயமான ஓட்டுச்சாவடிகள்