மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் சுலபமாக ஓட்டளிக்க வாகன வசதி :கலெக்டர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த குடிமக்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று வர வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க இயலாதவர்கள் இன்று நடக்கும் ஓட்டு பதிவில், தங்களின் வீடுகளில் இருந்து ஓட்டுசச்சாவடிக்கு சிரமமின்றி சென்று ஓட்டு அளிக்க வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு, இசிஐநெட் சக்ஷம் செயலி, 1950 ஹெல்ப்லைன் மற்றும் கட்டுப்பாட்டு அறை மூலம் தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரிவிக்கும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வசிக்கும் இடங்களில் இருந்து ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்று ஓட்டு அளித்துவிட்டு மீண்டும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தனித்தனியாக வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் இதனை பயன்படுத்தி 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வீடுகள் கட்டித்தரக்கோரி பளியன்குடியில் ஓட்டு போட மறுத்த பழங்குடியின மக்கள் - பேச்சுவார்த்தைக்குப் பின் ஓட்டளித்தனர்
-
மறவபட்டியில் இரவு 7:15 வரை நீடித்த ஓட்டுப்பதிவு
-
ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
-
வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பு
-
3 இடங்களில் தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு
-
வண்ணமயமான ஓட்டுச்சாவடிகள்