பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 'பசுமை ஓட்டுச்சாவடி மையங்கள்'
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட-சபை தொகுதியில், பிளாஸ்டிக்கை ஒழித்து சுற்-றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையங்களிலும் முதலில் வரும், 5 வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க, அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் மரக்கன்-றுகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்களிடையே பசுமை தேர்தலை நடத்தவும், இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், தேர்தலை எதிர்கொள்வது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, நெகிழி பயன்படுத்-தக்கூடாது, முற்றிலும் ஒழிக்க வேண்டும் என, வாக்காளர்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, பில்பருத்தி, சிக்கம்பட்டி, கோணங்கிநாய்கனஹள்ளி, கடத்துார் உள்ளிட்ட, 34 இடங்களில், 'பசுமை குடில்கள்' அமைத்து முன்மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்
பட்டுள்ளது.
இந்த மையத்தில் குடிநீர் வசதி, வாக்காளர்கள் அமர இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து வசதி-களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்களை வரவேற்கும் விதமாக பசுமையான தென்னங்-கீற்றில் பந்தல் அமைத்து, வேப்பந்தலை மாட்-டப்பட்டு, இருபுறமும் வாழை மரங்கள், இனிக்கும் தேர்தலாக கரும்புகள் கட்டப்பட்டுள்-ளன. மாவிலை தோரணங்களுடன், ஓட்டுச்சா-வடி மையங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஓட்-டுச்சாவடி மையம் முழுவதும் பசுமையாக
மாற்றப்பட்டுள்ளது.
மேலும்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை
-
கஞ்சா கடத்தல் முக்கிய குற்றவாளி ஆறு ஆண்டுகளுக்கு பின் கைது
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு