ஓட்டு போடாத செந்தில் பாலாஜி; கோவையிலேயே ஐக்கியம்
கோவை: சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளருமான செந்தில் பாலாஜி ஓட்டளிக்கவில்லை.
இதுவரை கரூரில் போட்டியிட்டு வந்த செந்தில் பாலாஜி, கோவையில் தி.மு.க.,விற்கு வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
கோவை, கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் செந்தில் பாலாஜி மாறி மாறி பிரசாரம் செய்தார். செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு கரூர் தொகுதியில் தான் ஓட்டு உள்ளது.
தேர்தல் நாளான நேற்று, அவர் காலை கரூர் சென்று ஓட்டளித்துவிட்டு, கோவை வருவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி நேற்று கரூர் செல்லாமல் கோவையிலேயே இருந்துவிட்டார். சட்டசபை தேர்தலிலும் ஓட்டளிக்கவில்லை.
இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், ''செந்தில் பாலாஜி நேற்று ஓட்டு போடுவதற்காக கரூர் செல்லவில்லை. கோவையிலேயே தான் இருந்தார். ''ஓட்டுப்பதிவின்போது கோவை தெற்கு தொகுதியில் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டால், தாம் முன்னின்று சமாளிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.
''தேர்தலுக்கு முன்பாகவே கோவை தெற்கு தொகுதியில் குடியேறினார். தேர்தலன்று கூட அவர் கோவையில் தான் இருந்தார்; கரூர் செல்லவில்லை,'' என்றனர்.
வாசகர் கருத்து (27)
renga rajan - ,
24 ஏப்,2026 - 19:07 Report Abuse
தகுதி நீக்கம் செய்யவேண்டும் 0
0
Reply
Easwar Kamal - New York,இந்தியா
24 ஏப்,2026 - 17:09 Report Abuse
திரட்டு தனத்துக்கே முன்னோடி. கோவையில் என்ன செஞ்சு வச்சுட்டு வந்தாரோ தெரியலை. மே 4 தெரிய வரும். 0
0
Reply
Balamurugan - coimbatore,இந்தியா
24 ஏப்,2026 - 14:23 Report Abuse
இவருக்கு தோல்வியை பரிசாக தந்து கோவை மக்கள் காசு கொடுத்தால் ஒட்டு போட்டுவிடுவார்கள் என்ற கீழ்த்தனமான எண்ணத்தை இனி எந்த அரசியல்வாதியும் கனவில் கூட நினைத்து பார்க்கக்கூடாது. 0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
24 ஏப்,2026 - 13:55 Report Abuse
இவரின் வாக்கை கமலஹாசன் போட்டிருப்பார். 0
0
Reply
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
24 ஏப்,2026 - 13:53 Report Abuse
இவரு போட்டால் என்ன போடாவிட்டால் என்ன எப்படியும் ஜெயில் போகவேண்டும் 0
0
Reply
பிரேம் குமார் - ,
24 ஏப்,2026 - 13:33 Report Abuse
மாநில அமைச்சராக பொறுப்பு வகிக்கும் செந்தில் பாலாஜி கடைசி நிமிடம் வரை தனது வாக்கு சாவடிக்கு வராமல் தனக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கிய ஓட்டுரிமையை பயன்படுத்தாது ஆச்சரியமாக இருக்கிறது. வோட்டு போட வெளி நாடுகளிலிருந்து பலர் வந்த நிலையிலும் கள்ள ஓட்டால் ஒருவர் வாக்களிக்க முடியாத நிலையில் கூட அவருக்கு மாற்று வசதி செய்து வாக்களிக்க செய்த நிலையில் செந்தில் பாலாஜி தனது ஓட்டை போடாமல் தவிர்த்தது கண்டிக்க தக்கது. 99 வயதான ஹண்டே அவர்கள் தாமாகவே ஓட்டு சாவடிக்கு வந்து ஓட்டு போட்டுள்ளார். ஆனால் ஒரு வேட்பாளரான செந்தில் பாலாஜி ஓட்டு போடாததை திமுக நிச்சயம் கண்டித்திருக்க வேண்டும். எனினும் தேர்தலில் அவர் தப்பித்தவறி வெற்றி பெற்றாலும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதற்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பதோடு கிரிமினல் வழக்கையும் பதிவு செய்ய வேண்டும் 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24 ஏப்,2026 - 13:11 Report Abuse
அடுத்த தேர்தலின்போது அநேகமாக அவர் திஹார் சிறைச்சாலையிலிருந்து ஓட்டு போடுவார் என நினைக்கிறேன். அவர் மட்டும் அல்ல, பல திமுக திருடர்களும். 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
24 ஏப்,2026 - 12:21 Report Abuse
ஓட்டு போடாத ஒருவர் எப்படி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் ? வென்றால் இவரது வெற்றியை எப்படி அங்கீகரிப்பது ? இவர் ஒரு வேளை வெற்றி பெற்றால் அதை அவருக்கு வழங்கக் கூடாது. அதற்கு இவர் தகுதியில்லை. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
24 ஏப்,2026 - 12:15 Report Abuse
சில அரசியல்வாதிகள் வந்தால் கோவையில் தொழில் செய்ய முடியுமா என்று பெரிய சிறிய தொழில் அதிபர்கள் யோசிக்கும் நேரம்? மாமூல் கேட்டு தினமும் ரவ்டிகளை அனுப்பினால் என்று அவர்கள் கவலை கொள்வது நியாயம் தானே? 0
0
Reply
S.ANNADURAI - chennai,இந்தியா
24 ஏப்,2026 - 11:47 Report Abuse
93% ஓட்டுல ஜனநாயகவாதி செந்தில் பாலாஜி இல்லாமல் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது 0
0
Reply
மேலும் 17 கருத்துக்கள்...
மேலும்
-
வழக்கறிஞர் மீது தாக்குதல் எஸ்.பி.,யிடம் மனு
-
வள்ளி விலாஸ் இல்ல திருமண விழா அரசியல் கட்சி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து
-
போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் கோரிக்கை
-
அ.தி.மு.க., வேட்பாளரிடம் நலம் விசாரித்த கணேசன்
-
அ.தி.மு.க, வேட்பாளரால் விரட்டி பிடிக்கப்பட்ட கார் ஒப்படைப்பு
-
அரசு கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
Advertisement
Advertisement