அரசு பள்ளி கட்டடத்தில் விரிசல்
கூவத்துார்:பரமேஸ்வரமங்கலம் உயர்நிலைப் பள்ளி கட்டடத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூவத்துார் அருகே உள்ள பரமேஸ்வரமங்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில், பரமேஸ்வரமங்கலம், நெற்குணப்பட்டு, தண்டரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
கடந்த 2014ல் சென்னை அனுமின் நிலையத்தின் நிதி உதவியுடன், கட்டப்பட்ட இப்பள்ளியில் 14க்கும் மேற்பட்ட வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன.
இந்நிலையில், பள்ளிக் கட்டத்தின் பின்புறத்தில் விரிசல் ஏற்பட்டு, இடியும் நிலை யில் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பள்ளி கட்டப்பட்ட நாளில் இருந்து இதுவரை அக்கட்டடத்தில், வண்ணம் பூசுவது, பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 2012ல் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டட சுவரிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் பள்ளி கழிப்பறைகள் உள்ளன.
இதனால் பள்ளிகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. எனவே, கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கு முன், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
2021 தேர்தலை விட கூடுதலாக ஓட்டளித்தோர் 20 லட்சம் பேர்!
-
பழங்குடியின பெண்கள் 'குடம் கவிழ்ப்பு' போராட்டம்
-
ஓட்டுப்பதிவால் வனத்துறை சுற்றுலா தலங்கள் மூடல்
-
நீலகிரியில் விறு ,விறுப்பாக நடந்த தேர்தல்; 78.49 சதவீதம் ஓட்டு பதிவு
-
ஊஞ்சலாடிய போது விபரீதம் ;கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் பலி
-
ஓட்டளிக்க முடியவில்லை: வனத்துறையினர் ஏமாற்றம்