உத்திரமேரூரில் 3 இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தொகுதிற்கு உட்பட்ட வாலாஜாபாத் நேரு நகரில், ஓட்டுச்சாவடி எண் 133ல், ஓட்டுப்பதிவு துவக்கத்தின்போதே இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. பின், சரி செய்யப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது.
இதேபோல, களக்காட்டூர், அரசன் நகர் ஆகிய ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவின்போது ஓட்டு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு பின், சர் செய்யப்பட்டது.
காலையில் விறுவிறுப்பாக நடந்த ஓட்டு பதிவு வெயில் கராணமாக மதியம் 1:00 மணியளவில் மந்தமானது. எனினும், அதை தொடர்ந்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்தனர்.
உத்திரமேரூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று காலை 7:00 மணிக்கு, மனைவி மற்றும் மகனுடன் சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தன் ஓட்டை பதிவு செய்தார்.
இதேபோல, பா.ம.க., வேட்பாளர் மகேஷ்குமார், பெரியநத்தம் ஓட்டுச்சாவடியிலும், த.வெ.க., வேட்பாளர் முனிரத்தினம் போந்துார் ஓட்டுச்சாவடியிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாசிலாமணி ஒழையூர் ஓட்டுச்சாவடியிலும் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர்.
மேலும்
-
ஸ்தலசயனர் பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் விமரிசை
-
ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு சீல் வைப்பு துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு
-
சிவகங்கையில் சுகாதார பணியில் தொய்வு * சாக்கடை கழிவால் நோய் பரவல்
-
பயணியர் நிழற்குடை இன்றி மக்கள் சிரமம்
-
பல ஆண்டுகளாக துார்வாரப்படாத கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ள அவலம்
-
இடுக்கியில் கொளுத்தும் வெயில் ஏலச் செடிகளுக்கு தண்ணீர் தெளிப்பு