ஸ்தலசயனர் பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் விமரிசை
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இக்கோவிலில், நேற்று காலை 3:00 மணிக்கு, விஸ்வரூப பூஜையும், தொடர்ந்து நித்ய பூஜையும் நடந்தது.
பின்னர், பேரிதாடனம் எனப்படும் கொடியேற்ற நடைமுறைகள் நடந்து, ஸ்தலசயன பெருமாள், கொடியேற்ற பகுதியை அடைந்தார்.
கொடிமரத்திற்கு, துாப தீபமேற்றி, கொடிமர கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன், காலை 5:00 மணிக்கு கருடக்கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, சக்கரத்தாழ்வார் சிறிய மாடவீதியில் எழுந்தருளி, நவசந்தி பூஜை நடத்தி, தேவைதைகள் பிரம்மோத்சவத்திற்கு அழைக்கப்பட்டனர். பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதி திவ்விய பிரபந்த பாடல்கள் பாடி, ஸ்தலயசயன பெருமாள், தேவியருடன், கேடய சேவையுடனும், இரவு மங்களகிரி சேவையுடனும் வீதியுலா சென்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
-
கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்
Advertisement
Advertisement