கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்; வைகை அணையில் நீர் திறப்பு

1

மதுரை: மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவையொட்டி, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நடைபெறும் திருவிழாக்களின் உச்சமாக, மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவும், அதன் தொடர்ச்சியாக அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறுவது வழக்கம். இதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து திரண்டு வருவார்கள்.

இந்தாண்டு சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக, மே 1ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவையொட்டி, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 500 கனஅடி வீதம் 6 நாட்களுககு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால், தேனி, மதுரை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement