ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; உபியில் பயங்கரவாதிகள் 2 பேர் கை து
லக்னோ: பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவரை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.
சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் சமூக விரோத செயல்களை பயங்கரவாத தடுப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சூழலில், பாட்னா மாவட்டத்தின் சித்தபூரைச் சேர்ந்த இர்பான் காலேகான் பதான் என்பவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக உத்தரபிரதேச போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பதானை கைது செய்து பயங்கரவாத தடுப்பு படையினரின் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். மேலும், அவரது செல்போனில் சமூக வலைதளங்களின் பயன்பாட்டையும் ஆய்வு செய்தனர். அதில், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தவும், அதன் மூலம் பயங்கரவாதத்தைப் பரப்பவும் அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதற்காகப் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆட்களைத் திரட்டுவது, ஆயுதப் பயிற்சி அளிப்பது, எல்லை தாண்டி ஆயுதங்களை வாங்குவது மற்றும் நிதி திரட்டுவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சதியில் மும்பை சாகினாகாவைச் சேர்ந்த முர்ஷித் ஜாகித் அக்தர் ஷேக் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாழ்வும், வளமும் அனுபவிப்பது இங்கே ...... ஆனால் விசுவாசம் பாகிஸ்தானுக்கு ..... மத அடிப்படையில் ஒன்று சேர்கிறார்கள் என்று மற்றவர்களைப் பேச வைக்கிறார்கள் .....
இவனை போட்டு தள்ள வேண்டும். பொது வெளியில் ஓடவிட்டு துப்பாக்கியால் துளைத்து எடுக்க வேண்டும்மேலும்
-
லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி: முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
பாரம்பரிய நடனமான கரகாட்டத்தைஎவ்விதத்திலும் சிதைக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
'டிஜிட்டல் கைது' மோசடியை தடுக்க மத்திய அரசு அதிரடி: ஜனவரி முதல் 9,400 'வாட்ஸாப்' கணக்குகள் முடக்கம் 'சிம் கார்டு'களுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள்
-
பாம்பன் பாலம் ஓரத்தில் முள்மரங்கள்
-
தேர்தல் பணி ஊதியம்வழங்க கோரிக்கை
-
உற்சாகமாக குளித்த கோயில் யானை