தாராபுரத்தில் விறுவிறு வாக்குப்பதிவு
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி) தொகுதியில், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை அதிகாரிகள் அப்டெட்டில், 15 முதல், 20 சதவீதம் வரை வாக்காளர்கள் தங்களது ஓட்டுக்களை செலுத்தி வந்தது தெரிந்தது.
தொகுதியில் போட்டியிடும், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் இந்திராணி பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை, 7:00 மணிக்கு ஓட்டளித்தார். அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமா, மதுக்கம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியிலும், அமைச்சர் கயல்விழி, சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், த.வெ.க. வேட்பாளர் கவுரி சித்ரா தாராபுரம் சர்ச் ரோட்டில் உள்ள புனித அலோசியஸ் மையத்திலும் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் திவ்யா, கிழாங்குண்டலில் உள்ள ஆரம்பபள்ளியிலும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தார்.
தாராபுரம் நகரம் மற்றும் புறநகர பகுதியில் காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். கடும் வெயில் காரணமாக ஓட்டுபதிவில் மந்தம் ஏற்படலாம் என்று நினைத்த நிலையில், அதற்கு மாறாக வாக்காளர்கள் வருகை அதிகமாகவே இருந்தது.
-
மேலும்
-
விவசாயி உள்பட இருவர் மாயம்
-
சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி கடைகள் அடைப்பு; சாலைகள் 'வெறிச்'
-
தளியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா இ.கம்யூ., - த.வெ.க.,வினர் 6 பேர் கைது
-
விவசாயி மீது தாக்குதல்
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 84.99 சதவீதம் ஓட்-டுப்பதிவு
-
திருச்சி கிழக்கு தொகுதியில் ஓட்டு போட முடியாத முக்கிய கட்சி வேட்பாளர்கள்