வாக்காளர்களை கவர்ந்த 27 மாதிரி ஓட்டுச்சாவடிகள்
கடலுார்: மாவட்டத்தில் 27 மாதிரி ஓட்டுச்சாவடிகள் மற்றும் 9 பெண்களே நடத்தும் ஓட்டுச்சாவடிகள் வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தன.
கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலுார் என 9 தொகுதிகள் உள்ளன.
இவற்றில் மொத்தம் 27 மாதிரி ஓட்டுச்சாவடிகளாகவும், 9 பெண்களாக நடத்தும் ஓட்டுச்சாவடிகளாகவும் பிரிக்கப்பட்டன. பெண்கள் ஓட்டுச்சாவடியில் முழுக்க, முழுக்க அலுவலர்கள், அதிகாரிகள் அனைவரும் பெண்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த மாதிரி ஓட்டுச்சாவடிகள் கடலுார் தொகுதியில் 8 பூத்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திருமண விழா நடைபெறும் இடத்தைபோன்று வாழைமரம், சிவப்பு கம்பளம் விரிப்பு, உட்காருவதற்கு சோபா செட், குடிநீர், சாய் தளம், ஏர் கூலர், பலுான் ஆர்ச் போன்றவைகளால் மிளிர்ந்தன. சுற்றுப்புறம் முழுவதும் வண்ண துணியால் அழகுப்படுத்தப்பட்டிருந்தது.
இதுபோன்ற மாதிரி ஓட்டுச்சாவடிகள் கடலுார் ஜெயலட்சுமி கமிட்டி துவக்கப்பள்ளி, பீச்ரோட்டில் உள்ள பழைய நாட்டாண்மை கட்டடம், ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுப்போட வந்த வாக்காளர்கள் மாதிரி ஓட்டுச்சாவடியை பார்த்து அதிசயமாக பார்த்து மகிழ்ந்தனர்.
அதேப்போல மாவட்டம் முழுவதும், 9 ஓட்டுச்சாவடிகள் பெண்கள் மட்டுமே நடத்தப்படும் மையங்களாக இருந்தன.
மேலும்
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
-
கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்