புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் ஓட்டு  

நடுவீரப்பட்டு:பத்திரக்கோட்டை ஓட்டுச்சாவடியில் புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் தங்களது பெற்றோருடன் வந்து ஓட்டு போட்டனர்.நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவானந்தம்.அதே பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்.சிவானந்தம் மகன் கலைமாமணிக்கும்,மகாலிங்கம் மகள் ஜனனிக்கும் நேற்று நடுவீரப்பட்டில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.

இவர்கள் இருவருக்கும் நெய்வேலி சட்டமன்ற தொகுதி, பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டு உள்ளது.இதனால் புதுமண ஜோடிகள் மணக்கோலத்தில்,தங்களது பெற்றோருடன் வந்து ஜோடியாக ஓட்டுபோட்டனர்.மாப்பிள்ளை எம்.பி.ஏ.,பட்டதாரி.முந்திரி வியாபாரம் செய்து வருகிறார்.பெண் முதுகலை பட்டதாரி படித்து விட்டு,கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார்.



தாலி கட்டிய மாப்பிள்ளையாடு வாக்களிக்க வந்த மணப்பெண்

சிதம்பரம், ஏப். 24 -

சிதம்பரத்தில், தாலி கட்டிய மாப்பிள்ளையோடு, திருமணம் முடிந்தவுடன் வாக்குச்சாவடிக்கு சென்று மணப்பெண் ஒட்டளித்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பா.ஜ., பிரமுகர், மகள் அக்க்ஷயா- மணிகண்டன் தம்பதியினருக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கோகலே ஹாலில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு, மணப்பெண் அக்க்ஷயா, தாலி கட்டிய மாப்பிள்ளை மற்றும் தனது குடும்பத்தினருடன் சென்று, ஓட்டு செலுத்தினார். தன் ஜனநாயக கடமையை பூர்த்தி செய்ய வேண்டும் என என்னத்தோடு, திருமண மேடையேறிய பின், மணப்பெண் வாக்களிக்க வந்த சம்பவம், வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களை வியப்பில் ஆழ்த்தியது.



மணக்கோலத்தில் ஓட்டளித்தமணமக்கள்

மாவட்டத்தில் கடலுார், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் ஆகிய மூன்று தொகுதிகளில் மணக்கோலத்தில் வந்து மணமக்கள் ஓட்டைப்பதிவு செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று காலை 7:00மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை நடந்தது.

மாலை 5:00 மணி நிலவரப்படி 81.91 சதவீதம் ஓட்டுப்பதிவாகியிருந்தது. நேற்றைய தினம் முகூர்த்த தினம் என்பதால் நிறைய திருமணங்கள் நடந்தன.

அதில் கடலுார் தொகுதி பாதிரிக்குப்பம் ஓட்டுச்சாவடியில், திருமணமான கோலத்தில் புதுமண தம்பதியர் வந்திருந்து தங்களது ஓட்டைப்பதிவு செய்தனர்.

குறிஞ்சிப்பாடி தொகுதி, பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் மாம்பட்டைச் சேர்ந்த கலைமாமணி, ஜனனி புதுமண தம்பதியர் மணக்கோலத்திலேயே வந்து தங்களது ஓட்டைப்பதிவு செய்தனர். அதேபோல் சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.,பிரமுகர் மகள் அக் ஷயா மணிகண்டன் தம்பதியர் திருமணம் முடிந்த கையோடு, அண்ணாமலை பல்கலைக்கழக கோகலை ஹாலில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் மணக்கோலத்தில் சென்று தங்கள் ஓட்டைப்பதிவு செய்தனர்.

Advertisement