காலிறுதியில் ராம்குமார் ஜோடி
குவாங்ஜு: சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ராம்குமார் ராமனாதன் ஜோடி முன்னேறியது.
தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஜெர்மனியின் மாசர் ஜோடி, ஆஸ்திரேலியாவின் பியர்சன், குக் ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 33 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராம்குமார் ஜோடி 6-7, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், ஜப்பானின் டகரு யுஜுகி ஜோடி, இந்தியாவின் ரித்விக், அர்ஜுன் ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம் 29 நிமிடம் நடந்த போட்டியில் அனிருத் ஜோடி 7-6, 6-4 என நேர் செட்டில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவின் சாகேத் மைனேனி, ஜப்பானின் மட்சுய் ஜோடி, 6-4, 6-7 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் நாம் ஜி, பின்லாந்தின் நிக்லஸ் சல்மினென் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
மேலும்
-
'பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முன் மொழிந்தவன் நான்'
-
விவசாயி உள்பட இருவர் மாயம்
-
சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி கடைகள் அடைப்பு; சாலைகள் 'வெறிச்'
-
தளியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா இ.கம்யூ., - த.வெ.க.,வினர் 6 பேர் கைது
-
விவசாயி மீது தாக்குதல்
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 84.99 சதவீதம் ஓட்-டுப்பதிவு