75,064 ஓட்டுச்சாவடிகளும் 'சிசிடிவி' வாயிலாக கண்காணிப்பு

சென்னை: மாநிலம் முழுதும் உள்ள ஓட்டுச்சாவடிகள், 'சிசிடிவி கேமரா' வாயிலாக, தலைமை செயலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டது.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேரடி கண் காணிப்பில், 18 மாவட்ட வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினருடன், இது செயல்பட்டு வருகிறது.

மாநிலம் முழுதும் 75,064 ஓட்டுச்சாவடிகளும், அந்த மையத்துடன் இணைக்கப்பட்டு, நேரடியாக கண்காணிக்கப்பட்டன. ஓட்டுச்சாவடிக்கு உள்ளே ஒன்று மற்றும் ஓட்டுச்சாவடிக்கு வெளியே ஒன்று என, மொத்தம் 1.50 லட்சம் 'சிசிடிவி கேமரா'க்கள் அங்கு பொருத்தப் பட்டிருந்தன.

இவற்றின் வாயிலாக, மாநிலம் முழுதும் உள்ள ஓட்டுச்சாவடிகள் நேற்று, தலைமை செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டன.

இதேபோல, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள, 62 மையங்களும் நேற்று இரவு முதல் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement