ஓட்டளித்தவர்கள் சென்னை திரும்ப சிறப்பு ரயில்
சென்னை: சென்னையில் இருந்து ஓட்டளிக்க வந்தவர்கள், மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக, நாளை இரவு மற்றும் வரும், 26ம் தேதி சிறப்பு ரயில்கள், போத்தனுாரில் இருந்து இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு ஓட்டளிக்க செல்வோரின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. நேற்று ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், சென்னையில் இருந்து கோவை வந்தவர்கள், மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக, நாளையும், வரும் 26ம் தேதியும் போத்தனுாரில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்பட உள்ளது.
காலை 7:40 மணிக்கு போத்தனுாரில் புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக, மாலை 5:00 மணிக்கு சென்னை வரும். இதே நாட்களில், சென்னையில் மாலை 6:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 4:00 மணிக்கு போத்தனுார் சென்றடையும்.
மேலும்
-
பாஜவில் இணையும் ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பிக்கள்
-
ஸ்தலசயனர் பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் விமரிசை
-
ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு சீல் வைப்பு துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு
-
சிவகங்கையில் சுகாதார பணியில் தொய்வு * சாக்கடை கழிவால் நோய் பரவல்
-
பயணியர் நிழற்குடை இன்றி மக்கள் சிரமம்
-
பல ஆண்டுகளாக துார்வாரப்படாத கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ள அவலம்