மூதாட்டிக்கு தவறான சின்னம் கூறியதால் வாக்குவாதம்

மல்லசமுத்திரம்: கோட்டப்பாளையம் ஓட்டுச்சாவடியில், மூதாட்டி விசில் சின்னம் எங்கே உள்ளது என கேட்டதற்கு ஏஜென்ட் ஒருவர் வேறு ஒரு தவறான சின்னத்தை கூறியதால், அதில் மூதாட்டி ஓட்டு செலுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

மல்லசமுத்திரம் யூனியன், கோட்டப்பாளையம் கிராமம், ஓட்டுச்சாவடி எண் 48ல், வாக்களிக்க வந்த மூதாட்டி ஒருவர் விசில் சின்னம் எந்த எண் பட்டன் என கேட்டபோது, அங்குள்ள ஏஜென்ட் ஒருவர், 1வது எண் என தெரிவித்துள்ளார். மூதாட்டியும் 1ம்எண்ணில் ஓட்டு செலுத்தினார். இதனால், ஓட்டுச்சாவடியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அரைமணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஓட்டுப்பதிவு மீண்டும் தொடங்கியது.

Advertisement