சத்ய சாய்பாபா ஆராதனை மகோற்சவம்; புட்டபர்த்தியில் குவிந்த பக்தர்கள்
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள சத்ய சாய் பாபாவின் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ஸ்ரீ சத்ய சாய் ஆராதனா மஹோத்ஸவம் என்பது பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா தன் பௌதிக உடலை விட்டு, ஜோதி ரூபமாக மாறிய தினத்தை நினைவு கூறும் ஒரு புனிதமான நிகழ்வாகும். சுவாமியின் தெய்வீகத்தை உணர்ந்து, அவர் நம் இதயங்களில் வாழ்கிறார் என்பதை கொண்டாடும் நாள் இது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ம் தேதி ஸ்ரீ சத்ய சாய் ஆராதனா மஹோத்ஸவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உண்மை, அமைதி, அன்பு மற்றும் அகிம்சை ஆகிய மனித விழுமியங்களின் நடைமுறைக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நாளை உலக மனித மதிப்புகள் தினமாக ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பு கொண்டாடுகிறது.






























இன்று காலை 8:00 மணி - வேத பாரயணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, காலை 8:10 மணிக்கு சாய் பஞ்சரத்ன கிருதிகள் பாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் புனிதமான காலைப் பொழுதில், 'சாய் பஞ்சரத்னங்களை' இசைப்பது ஒரு மரபாக திகழ்கிறது.
பெயருக்கேற்ப, 'சாய் பஞ்சரத்ன கீர்த்தனைகள்' என்பவை, செவ்வியல் இசை மரபில் அமைந்த 'தியாகராஜ பஞ்சரத்னங்களின்' பாணியில் உருவாக்கப்பட்டவையாகும். இவை ஐந்து வெவ்வேறு ராகங்களில் அமைந்த ஐந்து இசை ரத்தினங்களின் தொகுப்பாகும்; ஒவ்வொன்றும் தனித்துவமான ஒரு பக்திச் சுவையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து காலை 9:00 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.எஸ்.நாகானந்த் அறிமுக உரை, காலை 9:10 மணிக்கு நிமிஷ் பாண்டியா, AIP, உரை நடைபெற்றது.காலை 9:20 மணிக்கு தெய்வீக சொற்பொழிவு நடைபெற்றது. காலை 9:35 மணிக்கு பஜனைகள் தொடர்ந்து மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மாலை 5:00 மணி - வேத பாராயணம், மாலை 5:45 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள சாய்பாபா மையங்களில் இந்த நாளில் சிறப்பு பஜனைகள் மற்றும் ஏழை எளியோருக்கு உணவளித்தல் போன்ற சேவைகள் நடைபெறுவது குறிபிடத்தக்கது.
வாசகர் கருத்து (2)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24 ஏப்,2026 - 13:00 Report Abuse
ஓம் ஸ்ரீ சத்ய சாய்பாபாவுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். 0
0
Reply
Chandru - ,இந்தியா
24 ஏப்,2026 - 12:46 Report Abuse
Raksha Sayeeswara Raksha Partheeswara Raksha Lokeswara Raksha Parameswara Raksha Jagadeeswara 0
0
Reply
மேலும்
-
வெற்றி எப்படி ஜோதிடர்களிடம் தேடி செல்லும் வேட்பாளர்கள் திக்..திக்.. மனநிலையில் தி.மு.க., அ.தி.மு.க.,வினர்
-
தேர்தல் பரபரப்பு முடித்தது களை கட்டும் பந்தையம்
-
ரோட்டில் ஓடும் கழிவுநீர் பொதுச்சுகாதாரம் பாதிப்பு
-
வளைவு பகுதியில் பிளக்ஸ் விபத்து ஏற்படும் அபாயம்
-
சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் 58வது திருஅவதார நாள் வேள்வி
-
திருத்தேரி ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
Advertisement
Advertisement