மேற்கு வங்கத்தின் நல்லாட்சியின் புதிய சகாப்தம்; ஓட்டுப்பதிவு சாதனை குறித்து அமித்ஷா பெருமிதம்
புதுடில்லி:மேற்கு வங்கத்தின் நல்லாட்சியின் புதிய சகாப்தம் என வழக்கத்தை விட அதிகமான ஓட்டு பதிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்கத்தின் முதற்கட்ட சட்டசபை தேர்தலில், வரலாறு காணாத வகையில் 92 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. வேட்பாளர்கள் மீது தாக்குதல், கல்வீச்சு சம்பவம் என வன்முறை சம்பவங்களுக்கு நடுவே, பெரும்பாலான இடங்களில் அமைதியாகவே ஓட்டுப்பதிவு நடந்தது. இது குறித்து சமூகவலைதளத்தில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
மேற்கு வங்கத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் கட்ட ஓட்டுப்பதிவின் மூலம், ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்பதில் அனைத்து சாதனைகளையும் முறியடித்த மாநிலத்தின் வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேற்கு வங்க வரலாற்றிலேயே மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான தேர்தல்களில் ஒன்றை உறுதிசெய்த தேர்தல் கமிஷனுக்கும், அனைத்து மத்திய ஆயுதக் காவல் படைகளின் வீரர்களுக்கும், மேற்கொண்டு மாநில போலீசாருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மேற்கு வங்கத்தில் ஒரு புதிய நல்லாட்சி சகாப்தத்தின் தொடக்கத்திற்கான தெளிவான அறிகுறியாகும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
மேலும்
-
வெற்றி எப்படி ஜோதிடர்களிடம் தேடி செல்லும் வேட்பாளர்கள் திக்..திக்.. மனநிலையில் தி.மு.க., அ.தி.மு.க.,வினர்
-
அதிக ஓட்டு சதவீதம் ஆட்சி மாற்றத்துக்கானதே; அன்புமணி மகிழ்ச்சி
-
தேர்தல் பரபரப்பு முடித்தது களை கட்டும் பந்தையம்
-
ரோட்டில் ஓடும் கழிவுநீர் பொதுச்சுகாதாரம் பாதிப்பு
-
வளைவு பகுதியில் பிளக்ஸ் விபத்து ஏற்படும் அபாயம்
-
சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் 58வது திருஅவதார நாள் வேள்வி